தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக தான் கங்குவாவை பார்க்கிறேன்" - நடிகர் சூரி கருத்து! - SOORI ABOUT KANGUVA

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக தான் கங்குவாவை பார்க்கிறேன் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

நடிகர் சூரி
நடிகர் சூரி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2024, 11:09 PM IST

தூத்துக்குடி :முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு, தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் வருகை தருவர்.

அந்த வகையில், நடிகர் சூரி இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய இன்று( நவ 18) வருகை தந்தார். கோயிலுக்குள் சென்ற அவர் சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் சூரியுடன் கடற்கரை பணியாளர்கள், பாதுகாவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும், கை கொடுத்தும் மகிழ்ந்தனர்.

நடிகர் சூரி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டிச 20ம் தேதி நான் நடித்த விடுதலை படத்தின் 2 ஆம் பாகம் வெளியாக உள்ளது. நேற்றைய தினம் அதன் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அந்த பாடல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. உலகத்தின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் இளையராஜா அவர்கள். அவர் எழுதியுள்ள பாடல்கள் தற்போதும் உள்ள சந்ததிகள் கேட்கும் வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க :”சூர்யாவை விமர்சிப்பது தவறு; சினிமாக்காரர்களை மட்டும் குறி வைப்பது ஏன்?” - இயக்குநர் இரா.சரவணன் கேள்வி!

நானும் அவரது காலத்தில் நடிகராக இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன். அவரது பாடல்கள் வாழ்வியலை உண்மைகளை பிரதிபலிக்கும். இளையராஜா அவர்கள் ஒரு புத்தகம். எனக்கு காமெடியானாவும், ஹீரோவாகவும் வாய்ப்பு கொடுத்தது மக்கள் தான். தற்போது விலங்கு வெப்சீரியஸ் எடுத்த இயக்குநர் பிரசாந்த் அவர்களின் படத்தில் நடிக்க உள்ளேன். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

தொடர்ந்து வெற்றி மாறனின் புதிய படத்திற்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும். நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் அருமையாக உள்ளது. நன்றாக இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான படமாகத் தான் நான் இதை பார்க்கிறேன். நயன்தாரா தனுஷ் பிரச்சனை குறித்து கேட்டதற்கு, அது எனக்கு தெரியாது. தெரிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை" என்றார்.

முன்னதாக, கோயிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சூரியிடம் சிறுவன் ஒருவன் நீங்கள் நடித்த டான் திரைப்படத்தை பலமுறை பார்த்தாக கூறினார். அதற்கு பதிலளித்த நடிகர் சூரி, படத்தை மட்டும் பலமுறை பார்த்தால் போதாது. பாடத்தையும் பலமுறை படிக்க வேண்டும். தாய் தந்தை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details