திருவள்ளூர்: பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உல்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை முதல் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்தார். பின்னர் அவர் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
திருத்தணி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் (Credits - ETV Bharat Tamil Nadu) அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர் மாலை, விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்துக் மகிழ்ச்சி அடைந்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் நடித்து வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வசூல் செய்து வெற்றிப் படமாக அமைந்தது.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள்: தனுஷ் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரையுலகம் வாழ்த்து!
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்குரா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக கூறபப்டுகிறது. மேலும் இப்படத்திற்காக புதிய கெட்டப்பில் சிவகார்த்திகேயன் உள்ளார். மேலும் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.