சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படம் "தக் லைஃப்" (Thug Life) கமல்ஹாசனின் 234வது படமான இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கால்ஷீட் பிரச்னை காரணமாக துல்கர் சல்மான் இப்படத்திலிருந்து விலகினார். துல்கர் சல்மானுக்குப் பதிலாக நடிகர் சிம்பு படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. அதில் கமல் உடன் சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி ஆகியோர் இருந்தனர்.