சென்னை: ’குரங்கு பொம்மை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானாவர் நித்திலன் சுவாமிநாதன். முதல் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் பெரிய அளவில் பேசப்பட்டவில்லை. இந்நிலையில், நித்திலன் இயக்கிய இரண்டாவது திரைப்படமான ’மகாராஜா’ பெரும் வரவேற்பைப் பெற்றது.
மகாராஜா படத்தின் திரைக்கதை மூலம் நித்திலன் இந்திய அளவில் பிரபலமடைந்தார். தமிழ் சினிமா படங்களை பார்க்காதவர்கள் கூட ’மகாராஜா’ திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் தேடி பார்த்தனர். அதற்கு முதல் காரணமாக பார்க்கப்படுவது, அப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் யூகிக்க முடியாத திரைகக்கதை. மிகவும் சாதாரண கதைக்கு, திரைக்கதை மூலம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், “மகாராஜா படத்தின் கதையை பல நடிகர்களிடம் கூறினேன். நடிகர் சாந்தனுவிடம் கூறிய போது அவருக்கு பிடித்திருந்தது. அவருடன் சேர்ந்து பல தயாரிப்பாளர்களை அணுகினேன். ஆனால் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் எனது முதல் படமாக குரங்கு பொம்மையை இயக்கினேன். இரண்டாவதாக மகாராஜா படத்தை இயக்கினேன்” என கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் சாந்தனு ஏன் இந்த மகாராஜா கதையில் நடிக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நடிகர் சாந்தனு இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவரது பதிவில், “இயக்குநர் நித்திலன், மகாராஜா கதைக்கு உயிர் கொடுத்ததற்கு மகிழ்ச்சி. நான் அப்போதே சரியான கதையை தேர்ந்தெடுத்ததில் பெருமை அடைகிறேன்.