தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மீண்டும் ரிலீஸ் தேதியில் ட்விஸ்ட் வைத்த பிரசாந்த்... அந்தகன் புது ரிலீஸ் தேதி என்ன? - Andhagan release date - ANDHAGAN RELEASE DATE

Andhagan release date: தியாகராஜன் இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் ஒரு வாரம் முன்கூட்டியே வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அந்தகன் பட போஸ்டர்
அந்தகன் பட போஸ்டர் (Credits - @actorprashanth X account)

By ETV Bharat Entertainment Team

Published : Jul 31, 2024, 4:20 PM IST

சென்னை: பிரபல நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில் அவரது மகனும், பிரபல நடிகருமான பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அந்தகன்’. இது இந்தியில் ஆயுஷ்மான் குரானா, ராதிகே ஆப்தே உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘Andhadhun’ படத்தின் ரீமேக்காகும்.

இதில் பிரசாந்த் உடன் சிம்ரன், யோகி பாபு, சமுத்திரகனி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அந்தகன் படப்பிடிப்பு முடிவடைந்து சில ஆண்டுகள் ஆன நிலையில் ரிலீசாகாமல் இருந்தது.

இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிய வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில், முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள ‘டிமாண்டி காலனி 2’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ ஆகிய படங்கள் வெளியாகிறது.

இந்நிலையில், மூன்று முக்கிய படங்கள் திரைக்கு வருவதால் ஒரு வாரம் முன்கூட்டியே படத்தை வெளியிட அந்தகன் படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பிரசாந்த் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:திரைப்பட புரொமோஷனுக்கு வர மறுக்கும் நடிகர்கள்; புலம்பும் தயாரிப்பாளர்கள்! - Tamil actors movie promotions issue

ABOUT THE AUTHOR

...view details