சென்னை :சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலில் (20643) நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் நேற்று பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்குவந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமானதாக இல்லை என்று கூறி, பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது. சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. ‘வந்தே பாரத்’-தில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.
நானதில் தொடர்ந்த செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென".. என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த பதிவுடன், ரயில்வே நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக அளித்த புகார் படிவத்தையும் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க :'சூர்யா 45' படத்தின் அப்டேட் வந்தாச்சு.. இயக்குநர் யார் தெரியுமா?