சென்னை:தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். தற்போது கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கிஸ்' (Kiss). நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது. அதில் காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருந்தது, வித்தியாசமான இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது. தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு கிஸ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
இளம் ஜோடியின் முத்தத்தில் ஆரம்பிக்கும் டீசர் காதல் ஜோடிகளை கண்டாலே வன்முறை செய்யும் கவினை அறிமுகப்படுத்துகிறது. டீசர் முழுக்க பெண்களையும் காதலர்களையும் வெறுப்பவராக கவின் வருகிறார். டீசர் முடிவில் அவரது முதல் முத்தம் பற்றி கேட்டதற்கு பின் ஒரு கதை இருப்பதாக முடிவடைகிறது.
முழுக்க முழுக்க இளமை ததும்ப காதல் கதையாக உருவாகியுள்ளது என டீசரில் தெரிகிறது. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டு தேதியை டீசரில் அறிவிக்கவில்லை. ஆனால் மே மாதத்திற்குள் படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் கவினுக்கு ஜோடியாக அயோத்தி’ பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் தேவயானி, நடன இயக்குநர் கல்யாண் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஹரீஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக RC பிரனவ் பணியாற்றுகிறார். இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் சில காரணங்கள் அவர் விலகியுள்ளார். ’டாடா’ திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கவினுக்கு ’ப்ளடி பெக்கர்; படத்திற்கு பிறகு வெளியாகும் படமாக ’கிஸ்’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:”செடி மரமாவதை யாராலும் தடுக்க முடியாது”... விஜய் பாணியில் குட்டி கதை சொன்ன பிரதீப் ரங்கநாதன்
அடுத்தடுத்து இயகுநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம், நயன்தாராவுடன் நடிக்கும் படம், பொன்ராம் இயக்கும் படம் என வரிசையாக கைவசம் படங்களை வைத்திருக்கிறார் கவின். ஏற்கனவே மார்ச் மாதம் விக்ரமின் ’வீர தீர சூரன்’, மோகன்லாலின் ’எம்புரான்’ ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கபட்டுள்ளன. இந்நிலையில் கவினின் படமும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.