சென்னை:இயக்குநர் மனோகரன் பெரியதம்பி இயக்கத்தில், நடிகர் தீரஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'பிள்ளையார் சுழி'. இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை சிலம்பரசி மற்றும் எயர் ஃப்ளிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
ஒரு மாற்றுத்திறனாளி குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி இருக்கிறது என இயக்குநர் தெரிவித்துள்ளார். தீரஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் தீரஜ் போதை ஏறி புத்தி மாறி, டபுள் டக்கர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். டபுள் டக்கர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரேவதி, மைம் கோபி, மத்தேயு வர்கீஸ், சீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.