தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம்பிடித்த அபர்ணா தாஸ்! - APARNA DAS WEDDING - APARNA DAS WEDDING

Aparna Das Wedding: தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும், டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் இன்று கேரளாவில் திருமணம் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 2:06 PM IST

சென்னை:தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற மலையாள படமான மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலுக்கும் டாடா பட நடிகை அபர்ணா தாஸுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான நிஜயன் பிரகாஷன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அபர்ணா தாஸ். மலையாளியான இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்திருந்த பீஸ்ட் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின் கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கணேஷ் கே பாபி இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவருக்கும், தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய மஞ்சும்மல் பாய்ஸ் என்ற மலையாள பட நடிகருமான தீபக் பரம்போல் என்பவருக்கும் இன்று கேரள மாநிலத்தில் புகழ் பெற்ற குருவாயூர் கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் பரவிய நிலையில், சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று இருவருக்கும் ஹல்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தீபக் பரம்போல் - அபர்ணா தாஸ் ஜோடிக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் மனோகரம் என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழில் தற்போது வரை நல்ல படங்கள் வரவில்லை: 'ரெட்ட தல' பட விழாவில் இயக்குநர் மோகன் ராஜா கருத்து - Retta Thala

ABOUT THE AUTHOR

...view details