தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"தாத்தா வராரே, கதறவிடப் போறாரே"... சேனாபதி கெட்டப்பில் தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ்! - cool suresh in indian 2 getup - COOL SURESH IN INDIAN 2 GETUP

cool suresh in indian 2 getup: 'இந்தியன் 2' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதை முன்னிட்டு, நடிகர் கூல் சுரேஷ், சேனாபதி கதாபாத்திரம் போன்று காக்கி உடையில் குதிரையில் திரையரங்கிற்கு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்தியன் 2 கெட்டப்பில் வந்த கூல் சுரேஷ் புகைப்படம்
இந்தியன் 2 கெட்டப்பில் வந்த கூல் சுரேஷ் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 1:56 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் பிரபலமான திரைப்படங்கள் வெளியாகும்போது நடிகர் கூல் சுரேஷ், வித்தியாசமான வேடங்களில் தியேட்டருக்கு வந்து கவனத்தை ஈர்ப்பது வழக்கம். முன்னதாக இயக்குநர் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்'படத்திற்கு குதிரையில் வந்தார். அதேபோல் சந்தானம் நடிப்பில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்திற்கு பாடையில் வந்து கவனம் பெற்றார்.

இந்தியன் 2 கெட்டப்பில் வந்த கூல் சுரேஷ் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த வகையில் இன்று வெளியாகி உள்ள 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு, இப்படத்தில் கமல்ஹாசன் ஏற்று நடித்துள்ள சேனாபதி கதாபாத்திரம் அணிந்துள்ளதை போன்று, காக்கி ஆடை உடுத்தி குதிரையில் சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் கூல் சுரேஷ். மேலும் 'இந்தியன் 2' படத்தின் ‘தாத்தா வராரு’ என்ற பாடலை பாடியபடி திரையரங்கிற்குள் வந்த அவர், கையில் அட்டை கத்தியை வைத்துக்கொண்டு லஞ்சம் கொடுத்தாலும் குத்துவேன், லஞ்சம் வாங்கினாலும் குத்துவேன் என்ற வசனத்தை பேசினார்.

சினிமா நடிகரான கூல் சுரேஷ், நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகர் ஆவார். நடிகர் சிலம்பரசன் நடித்து கடந்த 2022 இல், 'வெந்து தணிந்தது காடு' வெளியானபோது திரையரங்குகளில், “வெந்து தணிந்தது காடு, சிம்புவுக்கு வணக்கத்த போடு” எனக் கூறியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அது முதல் பிரபல நடிகர்கள் படங்கள் வெளியாகும்போது, அப்படத்தின் கதாநாயகன் போல வேடம் அணிந்து திரையரங்கிற்கு வந்து கவனம் பெற்று வருகிறார் கூல் சுரேஷ்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இத்திரைப் படம் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து, கடைசியாக கடந்த 2022இல் வெளியான விக்ரம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து, இன்று இந்தியன் 2 வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேட்டையனுடன் கங்குவா, விடாமுயற்சி மோதலா? சரியாக இருக்காது.. வெளிவந்த சீக்ரெட்! - vettaiyan release

ABOUT THE AUTHOR

...view details