சென்னை: பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற பிரியாணி கடை திறப்பு விழாவில், நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேரடியாக காட்டுப்பாக்கம் பகுதிக்கு வந்த நடிகர் ஆர்யா, புதிய பிரியாணி கடையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
ஒரு கடை திறப்பிற்கு அல்லது எந்த ஒரு நல்ல நிகழ்விற்கும் நடிகர்கள் வருவது என்றால் பேனர்களும், மேளதாளங்களும் முழங்க சிறப்பான வரவேற்புகளும் அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் ஆர்யா, தனது நண்பரின் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்கு எந்தவித ஆரவாரமும் இல்லாமல் எளிமையான முறையில் வந்து திறந்து வைத்துவிட்டுச் சென்றார்.