தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தீபாவளிக்கு வெளியாகியுள்ள 4 மாஸ் திரைப்படங்கள் - நீங்க என்ன படம் பாக்கப் போறீங்க? - DIWALI FESTIVAL

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன், பிரதர், லக்கி பாஸ்கர், பிளடி பெக்கர் ஆகிய 4 முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரைப்பட போஸ்டர்
திரைப்பட போஸ்டர் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 12:44 PM IST

சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகார்த்திகேயனின் அமரன் (Amaran), ஜெயம் ரவியின் பிரதர் (Brother), துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் (Lucky Baskhar), கவினின் பிளடி பெக்கர் (Bloody Beggar) ஆகிய 4 முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது.

பொதுவாகவே, பண்டிகை நாட்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்புகள் உண்டு. முன்பெல்லாம், ரஜினி - கமல், விஜய் - அஜித் என போட்டிப் போட்டுக் கொண்டு படங்கள் வெளியாகும். அதனை ரசிகர்களும் கோலாகலமாகக் கொண்டாடி ரசிப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சினிமாவில் நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நவ.7-ல் கங்குவா ரிலீஸ் இல்லை.. தங்கலானுக்கும் சிக்கல்.. என்ன சொல்கிறது ஸ்டூடியோ கிரீன்?

இந்நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அமரன் படம் வெளியாவதை ஒட்டி பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதாரண இடத்திலிருந்து தனது உழைப்பால் உயர்ந்தவர் சிவகார்த்திகேயன் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தனர். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அமரன் திரைப்படம் வெளியாகியுள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரதர். கவினின் பிளடி பெக்கர் திரைப்படமும் இந்த தீபாவளிக்கு களமிறங்கியுள்ளன. மேலும், வெங்கி அட்டூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லக்கி பாஸ்கர் படமும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அனைத்து திரைப்படங்களும் வெவ்வேறு கதைக் களத்துடன் தயாரிக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

என்னதான், வித்தியாசமான கதைகளுடன் பல திரைப்படங்கள் வெளியானாலும், விஜய், அஜித் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளியாகாதது தங்களுக்கு வருத்தமாக உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details