தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து! - மறுத்தேர்வு எப்போ தெரியுமா? - ASSISTANT PUBLIC PROSECUTOR EXAM

கடந்த டிசம்பர் 14-ம் தேதி டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
டிஎன்பிஎஸ்சி அலுவலகம் (Credit - TNPSC)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2024, 10:40 PM IST

சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கடந்த டிசம்பர் 14-ம் தேதி இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர். நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இத்தேர்விற்கான கணினிவழித் தேர்வு 14.12.2024 அன்று பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4,186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது.

சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுத்தேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது.

இதையும் படிங்க:டிஎன்பிஎஸ்சி குரூப் II, IIA மற்றும் IV பாடத்திட்டம் மாற்றம் - லிங்க் இதோ!

தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று மேற்கண்ட பதவிக்காக 14.12.2024 பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது. மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, மறுத்தேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details