தூத்துக்குடி: வார விடுமுறை மற்றும் பொங்கல் திருநாள் நிறைவை ஒட்டி மக்கள் தூத்துக்குடி திரேஷ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க அதிகளவில் வருகை புரிந்தனர். அதனால் துறைமுகத்தில் மக்கள் கூட்டம் மோதியது.
பொங்கல் பண்டிகை முடிந்து தொடர் விடுமுறை காரணமாகவும், இன்று சனிக்கிழமை என்பதாலும் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் கரை திரும்பியுள்ளன. ஆனால் கடல் பகுதியில் காற்று அதிகமாக விசியதால் மீன்கள் அதிகமாக வலையில் சிக்கவில்லை என்பதால் மீன்களின் வரத்து குறைவாக இருந்துள்ளது.
இதையும் படிங்க: பொங்கல் முடிந்து சென்னை திரும்பிய மக்கள்.. ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
இது குறித்து மீன் வியாபரி ஜெனிஸ்டன் கூறுகையில், “ கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்களுக்கு காற்றின் காரணமாக அதிகளவு மீன் கிடைக்கவில்லை. இன்று பொங்கல் முடிந்து விடுமுறை என்பதால் மக்கள் பெரும்பாலும் வீட்டில் அசைவம் சாப்பிடுவார்கள் என தெரியும். அதை காரணத்தால் இன்று மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆனால் மீன் வரத்து குறைவாக இருந்ததால், மீன்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் விலை உயர்வை மக்கள் பொருட்படுத்தமால் மீன்களை வாங்கி செல்கின்றனர். மீன்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம். இன்றைய நிலவரப்படி சீலா மீன் கிலோ- ரூ.1600க்கும் ஊளி மீன், விளமீன், பாறை மீன் ரூ.600 முதல் 800க்கும், சால மீன் ஒரு கூடை ரூ.3000 வரை விற்பனையாகிறது” என்றார்.