தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

TNSET தேர்வு எப்போது? நெல்லை மனோன்மணியம் பல்கலை துணைவேந்தர் முக்கிய தகவல்! - MANONMANIAM UNIVERSITY ON SET - MANONMANIAM UNIVERSITY ON SET

MANONMANIAM UNIVERSITY ON SET: செட் தேர்வு நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 7:17 PM IST

திருநெல்வேலி:நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ் - பிரவர்டக் (ஐஐடியுடன் இணைந்த ஒரு கல்வி நிறுவனம்) மற்றும் இன்ஃபாக்ட் ப்ரோ ட்ரெய்னர்ஸ் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களின் திறன் அறிவை மேம்படுத்தும் வகையிலும், அவர்களை தொழில் முனைவோராக்கும் வகையிலும் வங்கி மற்றும் நிதி பாடநெறி குறித்து
ஆறு மாத கால பயிற்சியை நடத்தியது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்திரசேகர் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 104 கல்லூரிகளைச் சேர்ந்த 3,000 மணவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பித்த நிலையில் 1,500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 850 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.

இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், ஐஐடி மெட்ராஸ் பிரவோடக்கின் துணைத் தலைவர் ராஜதந்திர மூத்தா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடத்திய வங்கி மற்றும் நிதி பாடநெறி குறித்த பயிற்சியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த பயிற்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சியின் மூலம் எதிர்காலத்தில் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை உறுதிப்படுத்துவது முக்கிய அம்சமாக இருக்கும். நவீன நீதித்துறையின் சிக்கல்களைச் சமாளிக்க தேவையான திறன்களையும், திறமைகளையும் மாணவர்களுக்கு வழங்கும் பணியில் உறுதியாக இருப்பதற்காக இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து செட் தேர்வு நடத்துவதில் உள்ள தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செட் தேர்வை நடத்துவதற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தயார் நிலையில் உள்ளது. ஆன்லைன் முறையில் நடைபெறும் தேர்வு என்பதால், எந்தவித பிரச்னையும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ள சூழ்நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு சில பகுதிகளில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. தேர்வுக்கான அறிவிப்பை அரசு தான் வெளியிட வேண்டும். 97 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே, செட் தேர்விற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு கட்டணம் உள்பட எந்த விதமான கட்டண உயர்வும் இதுவரை செய்யப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் பழைய கட்டணமே நடைமுறையில் உள்ளது. பல்கலைக்கழக நிதி நெருக்கடி விரைவில் சீராகும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு நிதி பெறுவது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் உயர்கல்வித் துறையுடன் பேசி வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:பயிற்சிகளை முடித்து வீரநடை போட்டு தேசத்தைக் காக்க புறப்பட்ட வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details