தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / education-and-career

ஐஐடி வரலாற்றில் முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவை அறிமுகப்படுத்தும் சென்னை ஐஐடி! - ஸ்போர்ட்ஸ் கோட்டா

IIT Madras introduce Sports Quota: விளையாட்டு வீரர்களுக்கு முதல் முறையாக சென்னை ஐஐடியில் இட ஒதுக்கீடு மதிப்பெண் அடிப்படையில், ஒவ்வொரு பிரிவிலும் இடங்கள் ஒதுக்கிடப்படும் எனவும், அதில் ஒரு இடம் மாணவிகளுக்கும் ஒதுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ஐஐடியின் வராலாற்றில் ஸ்போர்ட்ஸ் கோட்டா அறிமுகப்படுத்தும் சென்னை ஐஐடி
ஐஐடியின் வராலாற்றில் ஸ்போர்ட்ஸ் கோட்டா அறிமுகப்படுத்தும் சென்னை ஐஐடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 9:39 PM IST

Updated : Feb 4, 2024, 2:26 PM IST

சென்னை: பொதுவாக கல்லூரிகளில் மாணவர்கள் சேரும்போது இடஒதுக்கீடு அடிப்படையிலான தீர்மானங்கள் அதிகளவில் இருக்கும். குறிப்பாக விளையாட்டு, மதிப்பெண் போன்ற பல்வேறு பிரிவிகளின் கீழ் கோட்டா முறைகள் ஒத்து செயல்படும். சிலர் மதிப்பெண் அடிப்படையிலும், சிலர் விளையாட்டு அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அந்த வகையில், சென்னை ஐஐடி முதல் முறையாக அதன் இளநிலை படிப்புகளுக்கு மதிப்பெண்களைக் கடந்து ஸ்போர்ட்ஸ் கோட்டா அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதுவரையில் இந்தியாவில் உள்ள எந்த ஐஐடிகளும் ஸ்போர்ட்ஸ் கோட்டா முறையை அறிமுகப்படுத்தாத நிலையில், சென்னை ஐஐடி அறிவித்துள்ளதையடுத்து, இது பல்வேறு வரவேற்புகளைப் பெற்றுள்ளது. மேலும், ஸ்போர்ட்ஸ் கோட்டவை அறிமுகப்படுத்தும் முதல் ஐஐடி என்ற பெருமையையும் பெறுகிறது, சென்னை ஐஐடி.

இதைத் தொடர்ந்து, நிகழ் கல்வி ஆண்டான 2024 - 2025ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில் SEA - SPORTS EXCELLENCE ADMISSION எனத் தொடங்கப்பட்டு, இந்த முறையின்படி சிறப்புமிக்க இரண்டு இடங்களாகப் பிரிக்கப்படும். அதில் மகளிருக்கென ஒரு இடமும், தேசிய அளவில் வெற்றிடங்களை தயார்படுத்த பொது பிரிவினருக்கென ஒரு இடமும் வழங்கப்படும் என்றும் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, படிப்பு சார்ந்து மட்டுமின்றி, அவரவரின் விளையாட்டு ஆர்வங்களிலும் மேம்படுத்தவும் ஒரு புது முயற்சியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SEA-வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் JEE (advanced) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் Joint Seat Allocation Authority (JoSAA) என்ற போர்டல் மூலம் இல்லாமல், சென்னை ஐஐடியால் இயக்கப்படும் இணையதளம் மூலம் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://jeeadv.iitm.ac.in/sea/ என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குனர் காமகோடி கூறுகையில், "தேசிய கல்விக் கொள்கையின்படி இந்த முயற்சி கல்வியில் முற்போக்கு அடிப்படையிலான திட்டங்களுக்கு வழிவகுக்கின்றது. சென்னை ஐஐடியின் இந்த முயற்சியால், தகுதி வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பொறியியல் கடந்து, விளையாட்டுத் துறையிலும் திறம்பட செயலாற்ற வழிவகுக்கும்.

விளையாட்டுப் பிரிவுகளைக் கடந்து பல்வேறு கலை சார்ந்த வாய்ப்புகளுக்கும் அடித்தளமிடப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, கூடிய விரைவில் அனைத்து பயன்பாடுகள் கொண்ட விளையாட்டு அரங்கு மற்றும் விளையாட்டுத் துறையில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். இதனால் எங்கள் மாணவர்கள் கல்வி மட்டுமின்றி, விளையாட்டுத் துறையிலும் சாதனை படைப்பதற்கும் அதிகளவில் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இதில் பயன்பெற விரும்பும் மாணவர்கள், பொது தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் அல்லது JEE (Advanced) தரவரிசைப் பட்டியலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், மாணவர்கள் நான்கு வருடத்திற்கு முந்தைய தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று, சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, இதில் தேர்வாகும் மாணவர்களுக்கென தனி தரவரிசைப் பட்டியல் (Sports rank list-SRL) தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையிலேயே மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:“சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!

Last Updated : Feb 4, 2024, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details