சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு! - CBSE EXAM TIMETABLE 2025
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, தேர்வுகள் 2025 பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
சென்னை:மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வுகள் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வுகள் 2025 பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும், கூடுதல் விவரங்களை cbse.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
வ.எண்
தேதி
பாடங்கள்
1
15/02/25
ஆங்கிலம் (English)
2
20/02/25
அறிவியல் (Science)
3
22/02/25
பிரெஞ்சு மற்றும் சமஸ்கிருதம் (French and Sanskrit)
4
25/02/25
சமூக அறிவியல் (Social Science)
5
27/02/25
தமிழ்
6
28/02/25
இந்தி (Hindi)
7
06/03/25
தெலுங்கு
8
10/03/25
கணிதம் (Mathematics)
9
17/03/25
மலையாளம்
10
18/03/25
கணினி பயன்பாடு (Computer application), செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence), தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
தேர்வு நேரம்: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடைகிறது.
மாணவர்களுக்கு ஒரு தேர்வுக்கும் மற்றொரு தேர்வுக்கும் இடையில் தேவையான இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு தேதியினை கருத்தில் கொண்டு, நுழைவுத் தேர்வுகளுக்கு முன்பாக பொதுத்தேர்வினை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுத்தேர்வுகள் தொடங்குவதற்கு 86 நாட்கள் முன்பாகவே, தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வு தேதிகள் வெளியிடப்பட்ட தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 23 நாட்கள் முன்பாகவே தேர்வு தேதி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, மாணவர்களுக்கு திட்டமிட்டு படிப்பதற்கு இது வசதியாக இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.