சென்னை: தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வில் 750 அரசுப் பள்ளி மாணவர்கள், 750 அரசுப் பள்ளி உள்பட அனைத்து வகைப் பள்ளி மாணவர்கள் தேர்வுச் செய்யப்பட்டதற்கான முடிவுகளை அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 11-ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் இலக்கியத்திறனை அறிந்துக் கொள்வதற்காக தமிழ் மொழி இலக்கியத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தகுதிப்பெறும் 1500 மாணவர்களுக்கு 11, 12-ஆம் வகுப்பில் மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் 2024-25ஆம் கல்வியாண்டில் தமிழ் மாெழி இலக்கியத் திறனறிவுத்தேர்வு அக்டோபர் 19-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வினை 2 லட்சத்து 35 ஆயிரத்து 25 மாணவர்கள் எழுதினர்.