சென்னை: தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், இந்திய மக்களின் சேமிப்பிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. ஆனால், தற்போதைய தங்கத்தின் விலை ஏற்றத்தால் சாமானிய மக்களுக்கு அது எட்டாக்கனியாக மாறி வருகிறது.
தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்தைக் கண்டு வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக உயர்வைக் கண்டு வந்த தங்கத்தின் விலை மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.
கடந்த 4 நாட்களில் ரூ.2000 குறைந்த தங்கம்: கடந்த திங்கட்கிழமை ரூ.55 ஆயிரத்தை கடந்து விற்பனையான தங்கத்தின் விலை தற்போது குறையத் துவங்கியுள்ளது. அதாவது, தொடர்ச்சியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை மே 22 விலையில் மாற்றமின்றி விற்பனையானது. அதைத் தொடர்ந்து, நேற்று மற்றும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு சுமார் 2 ஆயிரம் வரை குறைந்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் இன்று (மே 24) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.53 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்து 650க்கு விற்பனை; அதேபோல, சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ரூ.96.50-க்கும், 1 கிலோ கட்டி வெள்ளி ரூ.96 ஆயிரத்து 500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நான்கு நாட்களில் வெள்ளியின் விலை ரூ.4.50 குறைந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை ஒரு கிராம் வெள்ளி ரூ. 100 கடந்து விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (மே 24):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,650
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.53,200
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.7,255
- 1 சவரன் தங்கம் (24-கேரட்) - ரூ.58,040
- 1 கிராம் வெள்ளி - ரூ.96.50
- 1 கிலோ வெள்ளி - ரூ.96,500
இதையும் படிங்க: கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க 28 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு!