சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது. அது மட்டுமின்றி, சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம், பொருளாதார மந்தம் என பல்வேறு காரணங்களை முன்வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உலக நாடுகளிடையே உருவாகி வரும் போரின் எதிரொலி மற்றும் பொருளாதார மந்தம் காரணாமாக கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றம் கண்டு வந்தது. தற்போது சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தால் உள்நாட்டு பொருளாதாரச் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
அதன்படி, கடந்த சில நாட்களாக அதிரடியாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது குறையத் துவங்கியுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.