டெல்லி:இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதம் எனப்படும் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்போது வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். இதனால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், ரெப்போ வட்டி விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் வெளியாகும்போது அனைவரின் கண்களும் அதனை உற்று நோக்கும்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு (Monetary policy meeting), ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை கூடி, ரெப்போ வட்டி விகிதம் தொடர்பாக முடிவெடுப்பது வழக்கம். நிதி ஆண்டிற்கு 6 முறை நிதிக் கொள்கை குழு கூடி, பண வீக்கத்தை சரிசெய்யும் வகையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கும். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் எம்பிசி கூட்டம், நேற்று முன்தினம் (பிப்.6) மும்பையில் துவங்கியது.