மதுரை:மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே மலர் வணிக வளாகம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, பாலமேடு, அலங்காநல்லூர், விராதனூர், நெடுங்குளம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் மதுரை மல்லிகை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் மட்டுமின்றி விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற அண்டை மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் இங்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
இந்நிலையில், திருக்கார்த்திகையை முன்னிட்டு அண்மையில் பூக்களின் விலைநிலவரம் தொடர் ஏற்றம் கண்டிருந்தது. இந்நிலையில் இன்றைய நிலவரப்படி பனிப்பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளதால் மலர் சந்தைக்கு பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது.
குறிப்பாக, நேற்றைய நிலவரப்படி மதுரை மல்லிகை கிலோ ரூ.2000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- மெட்ராஸ் மல்லிகை ரூ.700
- பிச்சி பூ ரூ.1000
- முல்லை பூ ரூ.800
- செவ்வந்தி பூ ரூ.180
- சம்பங்கி பூ ரூ.200
- செண்டு மல்லி ரூ.100
- கனகாம்பரம் ரூ.1,000
- ரோஜா ரூ.250
- பட்டன் ரோஜா ரூ.300
- பன்னீர் ரோஜா ரூ.300
- கோழிக்கொண்டை ரூ.120
- அரளி ரூ.600, தாமரை (ஒன்று) ரூ.25