தருமபுரி/ மதுரை:தருமபுரியில் நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள பூக்கள் சந்தையில் இருந்து பூக்கள் பெங்களூரு, ஓசூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. செப்.17 (செவ்வாய்க்கிழமை) அன்று புரட்டாசி மாதம் தொடங்குவதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை கடைசி முகூர்த்த நாள் என்பதாலும் பூக்கள் வரத்து குறைந்து இருக்கும் நிலையில், பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது.
கடந்து இரு வாரங்களாக தொடர்ந்து வெயில் அதிக அளவு இருந்ததால் மல்லிகை பூக்களின் வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக, 1 கிலோ மல்லிகை பூ ரூ.500 என நேற்று விற்பனை ஆன நிலையில், இன்று ரூ.1,000-க்கும், சன்னமல்லி 1 கிலோ ரூ.900-க்கும் விலை உயர்ந்து விற்பனையானது. பட்டன் ரோஸ் 1 கிலோ ரூ.200, சம்பங்கி 1 கிலோ 250 ரூபாய்க்கும், சாமந்தி 1 கிலோ ரூ.60க்கும், கனகாம்பரம் 1 கிலோ ரூ.1000க்கும் விற்பனையானது.
இதையும் படிங்க:கோவையில் ஓணம் பண்டிகை.. ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய மகாபலி மன்னர்!