தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.680 உயர்ந்த தங்கம்.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? - தங்கத்தின் விலை

Gold and Silver Rate: கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் கண்டு வந்த தங்கத்தின் விலையில், இன்று (மார்ச் 5) அதிரடியாகக் கிராமுக்கு ரூ.85 அதிகரித்து, 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.6,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.

today gold and silver rates in chennai
தங்கம் மற்றும் வெள்ளி விலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 11:01 AM IST

Updated : Mar 5, 2024, 11:08 AM IST

சென்னை: இந்திய மக்களிடையே எதிர்காலத்திற்கான சேமிப்பில் முக்கிய பங்கு வகிப்பது நகை சேமிப்பு. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் இன்று (செய்வாய்கிழமை) காலை விலை நிலவரப்படி, தங்கத்தின் கிராமுக்கு ரூ.85 அதிரடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒரு கிராம் 6 ஆயிரத்தைக் கடந்தும், சவரன் 48 ஆயிரத்தைக் கடந்தும் விற்பனையாகி வருகிறது. மேலும் டாலர்களின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை ஏற்றமானது உள்ளநாட்டுச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

சென்னையில் 22-கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.85 அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6 ஆயிரத்து 15க்கும், ஒரு சவரன் ரூ.48 ஆயிரத்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, வெள்ளி ஒரு கிராம் வெள்ளி ரூ.78.20க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.78 ஆயிரத்து 200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மார்ச் 5 இன்றைய விலை நிலவரம்:

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.6,015
  • 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.48,120
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,485
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.51,880
  • 1 கிராம் வெள்ளி - ரூ.78.20
  • 1 கிலோ வெள்ளி - ரூ.78,200

இதையும் படிங்க: கென்யாவிற்கு சென்ற ஜாபர் சாதிக்..! உடன் சென்றவர்கள் யார்? பட்டியலைத் தேடும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு

Last Updated : Mar 5, 2024, 11:08 AM IST

ABOUT THE AUTHOR

...view details