Byசௌரப் சுக்லா
புதுடெல்லி:அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் மிகவும் விரும்பப்படும் உலோகமாக தங்கம் விளங்கும் என்பதால் தங்கத்தின் விலை வரும் நாட்களில் மீண்டும் உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். குறுகிய கால லாபத்துக்கான பதுக்கல் காரணமாக தங்கத்தின் விலை உயர்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிக லாபம் கிடப்பதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
10 கிராம் தங்கத்தின் விலை வரும் ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுக்குள் ரூ.1.25 லட்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் உணர்கின்றனர். தங்கத்தில் அதிக அளவு முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் என்பதால் சுவிட்சர்லாந்தை அடிப்படையாகக் கொண்ட யுபிஎஸ் எனும் நிறுவனம் தங்க விலை குறித்த கணிப்பு என்பது அவுன்ஸ் (28.34 கிராம்) ஒன்றுக்கு 3200 டாலர் ஆக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் அந்நிய செலாவணி கையிருப்புகளின் பல்வகைப்படுத்தல், அதே போல பரிமாற்ற வர்த்தக நிதிகள் ஆகியவற்றின் வலுவான தேவைக்கான அங்கீகாரம் காரணமாக 2025ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3000 டாலர் ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
தங்க நகையை ஆர்வத்துடன் பார்க்கும் வாடிக்கையாளர் (ANI) அந்த புரோக்கரேஜ் நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சர்வதேச நாடுகளுக்கு விதிக்கும் வரி கொள்கை நடவடிக்கைகளின் செயல்பாடுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் நேரிட்டிருக்கும் விரிவான மிக ஆழமான இடையூறுகள் ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலையானது நடுத்தரமான அளவை விடவும் மிக உயர்ந்த பட்ச அளவு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போதைய சூழலில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் முக்கியமான பயனாளர்கள் இந்தியா இருப்பதாலும் விலை அதிகரித்திருக்கிறது.
ஈடிவி பாரத்துக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்த அனுஜ் குப்தா, "10 கிராம் தங்கம் ரூ.87,000 ஆக இருக்கும். இந்த அளவு விலை உடைபடும்போது, தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும். எனவே, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இதனை அணுக வேண்டும். நீண்டகாலத்தைப் பொறுத்தவரை தங்கத்தின் விலை உயரும் வாய்ப்பை கொண்டுள்ளது. குறைந்த காலகட்டத்தைப் பொறுத்தவரை சில லாப பதிவு இருக்கக்கூடும்," என்றார்
தங்க நகையை அணிந்து பார்க்கும் பெண் (ANI) "அடுத்த 3 முதல் 4 மாதங்களில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.89,000 முதல் 90,000 வரை உயரக் கூடும். மே-ஜூன் மாதங்களில் தங்கத்தின் விலை குறையலாம். ஆனால், அதற்கு முன்பு வாய்ப்பில்லை. வரும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,25,000 அளவை தொடும். அதே நேரத்தில் தங்கத்தைப் போல வெள்ளியின் விலை எதிர்பார்த்த அளவுக்கு உயராது," என்றும் அவர் தெரிவித்தார்.