டெல்லி : கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2023-24 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் முதலீடுகளுக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 25 சதவீதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் பொருளாதார சூழலுக்கு ஏற்ப தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி வகிதம் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு ஆண்டுதோறும் கூட்டி வட்டி விகிதங்கள் குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
அதன்படி 2023-24 நிதி ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8 புள்ளி 25 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் நடப்பு நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2022-23 நிதி ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8 புள்ளி 14 ஆக நிர்ணயித்து அறிவிக்கப்பட்டு இருந்தது.