தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காபி ஷாப் கழிவறையில் ரகசிய கேமரா! பெங்களூருவில் நடந்தது என்ன? - Bengaluru Coffee Shop hidden camera - BENGALURU COFFEE SHOP HIDDEN CAMERA

பெங்களுரூவில் காபி ஷாப் ஒன்றின் கழிவறையில் கேமராவை மறைத்து வைத்து பெண்களை படம் பிடித்ததாக ஊழியரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Etv Bharat
Representational Image (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 11, 2024, 1:51 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிரபல காபி ஷாப்பின் கழிப்பறையில் ரகசிய கேமரா பொருத்திய ஊழியரை, நிர்வாகம் பணி நீக்கம் செய்த நிலையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெங்களூருவின் பெல் சாலையில் உள்ள பிரபல காபி ஷாப்புக்கு பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை சென்றிருந்தார். இந்த நிலையில், காபி ஷாப்பில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் மொபைல் போன் மூலம் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்ட அந்தப் பெண், அதிர்ச்சியடைந்தார்.

மொபைல் போன் கேமராவின் லென்ஸ் தெரியும் அளவுக்கு மட்டும் குப்பைத் தொட்டியில் துளையிடப்பட்டு, குப்பைத் தொட்டியினுள் மொபைல் போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், மொபைல் போனிலிருந்து வரும் சத்தத்தைத் தவிர்ப்பதற்காக, ஏர் பிளேன் மோடு ஆன் செய்யப்பட்டு இருந்ததும் சரியாக கழிப்பறை இருக்கையை நோக்கியவாறு கேமரா பொருத்தப்பட்டு இருந்ததையும் பெண் கண்டறிந்து உள்ளார்.

அது மட்டுமின்றி, கேமராவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, சுமார் 2 மணி நேரமாக கழிப்பறையை, கேமரா படம் பிடித்துள்ளது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து, காபி ஷாப் நிர்வாகத்திடம் ரகசிய கேமரா குறித்து, அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, மொபைல் போனின் உரிமையாளரான, காபி ஷாப்பில் பணிபுரியும் ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த நிலையில், காபி ஷாப் நிர்வாகம், அவரை பணி நீக்கம் செய்ததுடன், அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு புகார் தெரிவித்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:'எங்களது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்'.. ஹிண்டன்பெர்க் குற்றச்சாட்டுக்கு செபி தலைவர் பதில்..! - sebi chief Madhabi Buch

ABOUT THE AUTHOR

...view details