சென்னை:17வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 18வது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லீம் லீக் கட்சி, விசிக, கொமதேக உள்ளிட்ட கட்சிகளும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களம் கண்டன. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடந்த தேர்தலில் 303 இடங்களில் வெற்றி என பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்த பாஜக இந்த தேர்தலிலும் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், பெரும்பான்மை கிடைக்கவில்லை.