தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய பட்ஜெட் 2024; விசாகப்பட்டினம் - சென்னை தொழில் வழித்தடம் அமைக்க நிதி ஒதுக்கீடு! - chennai to VIzag - CHENNAI TO VIZAG

Visakhapatnam - Chennai Industrial Corridor: விசாகப்பட்டினம் - சென்னை தொழில் வழித்தடமும், ஹைதராபாத் - பெங்களூரு தொழில் வழித்தடமும் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடரில் அறிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் (CREDITS - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 4:35 PM IST

சென்னை:நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், ஆந்திர மாநில வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பீகார் மாநில வளர்ச்சிக்கு ரூ.26,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு பயில ரூ.10 லட்சம் கல்விக்கடன், புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதில் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கொப்பர்த்தி முனை மற்றும் ஒரவக்கல் முனையில் நீர், ரயில்வே, மின்சாரம் மற்றும் சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு தொழில் வளர்ச்சியை மேம்படுத்த கூடுதலாக நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ராயலசீமா, ஆந்திர கிழக்கு கடற்கரை பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விசாகப்பட்டினம் - சென்னை தொழில் வழித்தடமும், ஹைதராபாத் - பெங்களூரு தொழில் வழித்தடமும் ஆகியவற்றையும் உள்ளடக்கியது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (CREDITS - ETV BHARAT TAMIL NADU)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்! - AIADMK protest against DMK

ABOUT THE AUTHOR

...view details