ரூர்க்கி:உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து ரூக்கி நோக்கி தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர், தனது தங்கையுடன் காரில் பயணித்துள்ளார். அப்போது அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் ஒரு கட்டத்தில் காரை முந்திச் சென்று வழிமறித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து காரில் இருந்து இருவரையும் இறங்கக் கூறி இளைஞர்கள் மிரட்டியதாகவும் கார் கண்ணாடியை உடைத்து இரண்டு பெண்களிடம் இளைஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், இரண்டு பெண்களின் ஆடைகளை கிழித்து இளைஞர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
இரண்டு பெண்களும் சம்பவ இடத்தில் இருந்து துரிதமாக காரில் தப்பிச் சென்ற நிலையில், அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஒரு இளைஞரை கைது செய்தனர். மற்றொரு இளைஞர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.