மாலே :மாலத்தீவு முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா. கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் லட்சத்தீவு சுற்றுப்பயணத்தை கடுமையாக விமர்சித்து இடைநீக்கம் செய்யப்பட்ட மூன்று அமைச்சர்களில் ஒருவர் மரியம் ஷியனா. இந்நிலையில், மாலத்தீவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி குறித்து மரியம் ஷியுனா கடுமையான பதிவுகளை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
அதில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சியை விமர்சித்து மரியும் ஷியுனா வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியது. இந்திய தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரத்தை இழிவு படுத்தும் வகையில் மரியும் ஷியுனாவின் பதிவு பிரதபலித்தது. மேலும் அந்த பதிவில், மாலத்தீவு ஜனநாயக கட்சி மிகப்பெரிய சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மாலத்தீவு மக்கள் அவர்களிடம் விழ விரும்பவில்லை என்று பதிவிட்டு அசோக சக்கரம் போன்ற படத்தைப் வெளியிட்டு இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் எழுந்தனர். இந்நிலையில், அந்த பதிவை உடனடியாக நீக்கிய மரியம் ஷியுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரி உள்ளார்.