டெல்லி: 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மறு ஆய்வு செய்யக் கோரி, குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் மற்றும் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் கொண்ட சிறப்பு அமர்வில் நேற்று (பிப்.5) விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு சீராய்வு மனு குறித்த விசாரணையின் போது, வழக்கறிஞரின் வயது குறித்த வாதங்கள் எழுந்தன. மேலும், இந்த நீதிமன்றத்தின் மற்ற இரு மற்ற இரு அமர்வுகள் அளித்த தீர்ப்பையும் நாங்கள் மனதில் வைத்துள்ளோம் என்றனர்.
இதனிடையே மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, சட்டப்பிரிவு 142-ன் படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குற்றத்தின் மீது அல்லாமல், தண்டனை குறித்து முழுமையான நீதி வழங்க சிறப்பு அமர்வை வலியுறுத்தினார். அதனை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட சங்கர் தாக்கல் செய்த மனு மீது, சட்டப்பிரிவு 142-ன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் முழுமையான நீதி வழங்கிட சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த 2021 பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட சங்கருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் கூடுதலாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்து உத்தரவிட்டது.
அதன் பின்னர், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறப்பு விடுப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், 2022ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்யக் கோரி குற்றம் சாட்டப்பட்ட சங்கர் தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
அதன் பின்னர், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறப்பு விடுப்பு (SLP) கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், 2022ஆம் ஆண்டு மறு ஆய்வு செய்யக் கோரி குற்றம்சாட்டப்பட்ட சங்கர் தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில், வழக்கின் விசித்திரமான உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் படி உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதமுள்ள தண்டனை காலத்தில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த அபராதத்தை ரத்து செய்யப்படும் என்றும் உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.
முன்னதாக, குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டதால், இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமண வாழ்க்கை சிதைந்து, தற்போது அவருடைய மனைவியாக இரண்டு குழந்தைகளுடன் நிர்கதியாக்கப்பட்டு உள்ளதாக வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பிரிவு 142 என்றல் என்ன?: மிகவும் அரிதாக உச்சநீதிமன்றம் இந்த சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி தனித்தன்மை மற்றும் அசாதாரணமான அதிகாரங்களை வழங்குகிறது. அந்தவகையில் சில நேரங்களில் எழும் விவகாரங்களில் 'சட்டங்கள் மூலம் தீர்வுகள் எட்டப்படாத நிலையில், 'முழுமையான நீதி'-யை வழங்க உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரங்களை 142ஆவது சட்டப் பிரிவின் கீழ் பயன்படுத்த முடியும்.
உச்சநீதிமன்றம் தனது அதிகார வரம்பின் மூலம் எந்தவொரு காரணத்திற்காகவும் அல்லது முன்னதாக நிலுவையில் உள்ள விஷயங்களில் முழுமையான நீதியை வழங்குவதற்கு வேண்டிய ஆணையையும் அல்லது எந்த உத்தரவையும் பிறபிக்கலாம். நாடாளுமன்றத்தின் மூலமாக அல்லது எந்த சட்டத்தின் கீழும் பரிந்துரைக்கப்படும் வகையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யும் வரையில் அல்லது குடியரசு தலைவரின் உத்தரவின் படி, பரிந்துரைக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் அமல்படுத்தலாம்' என இந்த சட்டப்பிரிவு 142 (1) கூறுகிறது.
இதையும் படிங்க:சண்டிகர் மேயர் தேர்தல்: "ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல்.. ஜனநாயக படுகொலையை ஒருபோதும் அனுமதியோம்" - உச்ச நீதிமன்றம்!