தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 9, 2024, 10:31 AM IST

ETV Bharat / bharat

ஜம்மு & காஷ்மீரில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி; ராகுல் காந்தி இரங்கல்! - Jammu and Kashmir Terrorism attack

Jammu and Kashmir Terrorism Attack: ஜம்மு காஷ்மீரில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனத்தில் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலி; பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இச்சம்பவத்திற்கு ராகுல் காந்தி இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

ராணுவ வாகனம் (கோப்புப் படம்)
ராணுவ வாகனம் (கோப்புப் படம்) (Credits - Etv Bharat)

கதுவா: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் உள்ள மச்சேடி பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதாவது, கதுவா நகரிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் லோஹாய் மல்ஹரில் உள்ள பத்னோடா கிராமத்திற்கு அருகே உள்ள மச்செடி - கிண்ட்லி - மல்ஹர் சாலையில், மாலை 3.30 மணியளவில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி, துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

அந்த தாக்குதலில், முதலில் சில வீரர்கள் காயமடைந்ததாகத் தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 10 பேருடன் சென்ற வாகனத்தில் நடத்திய தாக்குதலில், 5 வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, மீதமுள்ள நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தாக்குதலின் போது, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்துள்ளனர். அந்த சண்டையின் போது மேலும் சில வீரர்கள் வந்துள்ளனர். ஆனால், அதற்குள் தீவிரவாதிகள் அருகேயுள்ள காட்டுப்பகுதிக்குள் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், "ஜம்மு & காஷ்மீர் மாநிலம் கதுவாவில் இந்திய ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்துகிறேன். அதேவேளையில், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் என ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

நமது ராணுவத்தின் மீது நடந்த இந்த கோழைத்தனமாக தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒரு மாதத்திற்குள் நடந்த 5வது தீவிரவாத தாக்குதல் இது. நமது நாட்டின் பாதுகாப்புக்கும், நமது ராணுவ வீரர்களின் உயிருக்கும் மிகப்பெரிய அடியாகும். தொடர்ந்து நடக்கும் இந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குத் தீர்வு என்பது வலுவான நடவடிக்கையில் இருந்து தான் வரும். வெற்றுப் பேச்சு மற்றும் பொய்யான வாக்குறுதிகளால் அல்ல. இந்த துக்க நேரத்தில் நாங்கள் நாட்டோடு உறுதியாக நிற்கின்றோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 4 வாரங்களில், கதுவா மாவட்டத்தில் நடந்த 2வது தாக்குதல் ஆகும். கடந்த ஜூன் 12 மற்றும் 13ஆம் தேதி தேடுதல் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வந்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் அப்போது மறைந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலில், சிஆர்பிஎப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த துப்பாக்கிச் சூட்டில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவரும் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த சில நாட்களுக்கு ரீஸ்ஸி பகுதியில் புனித யாத்திரை சென்று கொண்டு இருந்த யாத்ரீகர்கலின் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், கதுவா மாவட்டத்தில் மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆரூத்ரா நிதி நிறுவனத்திற்குத் தொடர்பு? - செல்வபெருந்தகை குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details