டெல்லி:நாடு முழுவதும் 78 சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைத்து உரையாற்றினார். இந்த விழாவில் பங்கேற்க ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு முதல் வரிசையில் அமர இடம் ஒதுக்காமல், ஐந்தாவது வரிசைியில் இடம் ஒதுக்கிய விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதால் தான் ராகுலுக்கு அங்கு இடம் அளி்க்க இயலவில்லை என்ற மத்தி பாதுகாப்பு அமைச்சகத்தின் விளக்கத்தை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. இது விதிமுறைகளை மீறிய செயல் என்று கூறியுள்ள காங்கிரஸ், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, இன்றைய விழாவில் பங்கேற்காத போதிலும், அவருக்கும் ஐந்தாவது வரிசையில்தான் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளது.