டெல்லி:எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்ப்பட்டன. நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ஆள் மாறாட்டம், குறிப்பிட்ட தனியார் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் அதிகம் பேர் நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்றது, ஒரே தேர்வு மையத்தில் ஒன்றாக தேர்வெழுதிய மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்தது, தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பீகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாா் சா்ச்சையானது மேலும் நாடு முழுவதும் 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், அரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்தது உள்ளிட்ட சம்பவங்கள் சா்ச்சையை கிளப்பின.
நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தோ்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால் மறுதோ்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து நீட் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம் நாத், அஹ்ஸானுதீன் அமானுல்லாஹ் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. அப்போது நீடி தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதால் இளங்கலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வை ரத்து செய்தும், மீண்டும் மறுதேர்வு நடத்த உத்தரவிடவும் கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இளங்கலை நீட் தேர்வுக்கான கலந்தாய்வை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர். மேலும், வினாத் தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய தேர்வு முகமை விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மறுதேர்வு நடத்துவது தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டிற்கு ரூ.5,700 கோடி, உ.பி-க்கு ரூ.25,069 கோடி.. மாநிலங்களுக்கான வரி பகிர்வு விடுவிப்பு! - Tax Devolution