ஹைதராபாத்:75வது குடியரசு தினவிழா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. ராமோஜி ஃபிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ராமோஜி குழும நிறுவனங்களின் மனிதவளத் தலைவர் கோபால ராவ், யுகேஎம்எல் (UKML - Ushakirana Movie Limited) இயக்குநர் சிவராமகிருஷ்ணா, விளம்பரத்துறை துணைத் தலைவர் ஏ.வி.ராவ், தோட்டக்கலை துணைத் தலைவர் ரவி சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ராமோஜி குழுமத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்கள், துணை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமோஜி ஃபிலிம் சிட்டி நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி, பிலிம் சிட்டி ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்.. மூவர்ண கொடியை ஏற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு!
ஆண்டு தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில் ராமோஜி ஃபிலிம் சிட்டி முழுவதும் கோலாகலமாகக் காணப்படும். குடியரசு தின கொடியேற்று மேடைகள் அமைக்கப்பட்டு வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது காண்போர் கண்களைக் கவரும் வகையிலிருந்தது மேலும், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள கட்டடங்களிலும் மூவர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்டன.
முன்னதாக, கடந்த ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியை அலங்கரிக்கப் போகும் ராமரின் பாதச் சுவடுகள் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு வரவழைக்கப்பட்டு ராமோஜி பிலிம் சிட்டியின் நிர்வாக இயக்குநர் விஜயேஸ்வரி முன்னிலையில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:குடவோலை கண்ட தமிழ் குடியே..! குடியரசு தின அணிவகுப்பில் கவனம் ஈர்த்த தமிழ்நாடு அலங்கார ஊர்தி!