டெல்லி: 18வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று (ஜூன்.24) தொடங்கியது. முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இன்று இரண்டாவது நாள் கூட்டத் தொடர் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி பதவியேற்பு! அரசியலமைப்பு புத்தகத்துடன் பதவியேற்பு! - Rahul Gandhi - RAHUL GANDHI
மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்பு புத்தகத்துடன் ராகுல் காந்தி பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Rahul Gandhi (Sansad TV)
Published : Jun 25, 2024, 4:22 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக பதவியேயேற்றுக் கொண்டார். கையில் அரசியலமைப்பு புத்தகத்துடன் வந்த ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினருக்கான பதவிப் பிரமாணத்தை செய்து கொண்டார். தொடர்ந்து காங்கிரஸ் தமிழக எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் தயாநிதி மாறன், துரை வைகோ, கனிமொழி, ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், உள்ளிட்ட உறுப்பினர்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.