ஐதராபாத்:முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நேற்று இரவு மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது, அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இரவு காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் சுயநினைவை இழந்த நிலையில் நேற்று (டிச.26) இரவு 08:06 மணிக்கு, புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவருக்கு அவசரப் பிரிவில், தீவிர சிகிச்சை அளித்ததாகவும், எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை எனவும், பின்னர் இரவு 09:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாகவும் மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு: இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல், வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் நாளை (டிச.28) நடைபெறும் எனவும், 7 நாட்கள் பொதுநிகழ்ச்சிகள அனைத்து ரத்து செய்யப்படுவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
மேலும், அவரது மறைவுக்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரசு அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:
"முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கல்வி மற்றும் நிர்வாகம் இரண்டையும் சமமாக எளிதாக்கிய அரிய அரசியல் தலைவர்களுள் ஒருவர். இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. தேசத்துக்காக அவர் ஆற்றிய சேவை, அவரது களங்கமற்ற அரசியல் வாழ்வு, பணிவு ஆகியவற்றுக்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார். பாரதத்தின் மிகச்சிறந்த புதல்வனுக்கு, எனது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்:
"பத்ம விபூஷண் விருது பெற்றவர். 1991-ல் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் கட்டடக் கலைஞர், தைரியமாக நம் தேசத்தை வழிநடத்தினார். வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான புதிய பாதைகளை உருவாக்கியவர். இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றியமைத்த முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங்-யின் மறைவு செய்தி என்னை வேதனை அடைய வைத்ததது.
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் என்ற முறையில், அவரது இல்லத்தில் நுண்ணறிவுத் தொடர்புகளில் ஈடுபடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பொருளாதாரம் குறித்த அவரது ஆழ்ந்த புரிதல், மென்மையான நடத்தை மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை என்றும் நிலைத்திருக்கும்.
சோனியா காந்தி: