சஹரன்பூர் : உத்தர பிரதேசம் மாநிலம் சஹரன்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது பாஜகவின் நோக்கம் மற்றும் அந்த பணி முடிக்கப்பட்டுவிட்டது என்று கூறினார். மேலும் காஷ்மீரை பிரித்தாளும் எண்ணம் கொண்டவர்கள் வீசிய கற்களை, கொண்டு விக்சித் ஜம்மு காஷ்மீரைக் கட்டத் தொடங்கி உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பாஜக அரசு எந்தவித பாகுபாடும் இல்லாமல் செயல்படுவதாகவும் எங்கள் கொள்கைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் அதற்காக 10 ஆண்டுகள் உழைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மக்கள் 100 சதவீதம் பயனடைய வேண்டும் என்றும் அதுதான் உண்மையான மதச்சார்பினை மற்றும் சமூக நீதி என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்தியக் கூட்டணி கட்சிகள் தங்களது போராட்டம் சக்திக்கு எதிரானது என்று சவால் விடுகிறார்கள், சக்தியை அழிக்க முயன்ற அனைவருக்கும் என்ன நடந்தது என்பது வரலாற்றிலும் புராணங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். இது மகா சக்தியின் இடம், சக்தி வழிபாட்டை ஒருபோதும் புறக்கணிக்காத நாடு இந்தியா என்று பிரதமர் மோடி கூறினார்.