டெல்லி:18வது மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியான நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பிரதமரா மோடி மூன்றாவது முறை பதவியேற்றுக் கொண்டார். அதேநேரம், 2019 மக்களவை தேர்தலை காட்டிலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கியன் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் 6 லட்சத்து 12 ஆயிரத்து 970 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக ஜூன் 18ஆம் தேதி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு செல்கிறார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 17வது தவணை தொகையை வெளியிடுகிறார். இந்த திட்டத்தின் மூலம் 9 கோடியே 26 லட்சம் விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயலால் அறிவிக்கப்பட்டு பின் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
அதன்படி இந்த திட்டத்தின் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில் 2 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக ஆறாயிரம் ருபாய் வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கான இந்த நிதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த நிதி திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகளின் வங்கி கணக்கின் கீழ் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 16 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நிதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 17வது தவணை ஜூன் 18ஆம் தேதி பிரதமரின் வாரணாசி பயணத்தின் போது வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொலை! பாதுகாப்பு வீரர் வீரமரணம்! - Chattisgarh Naxal encounter