தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; தேசிய புலனாய்வு முகமை நேரில் ஆய்வு! - Reasi terror attack - REASI TERROR ATTACK

Reasi terror attack: ரியாஸி மாவட்டத்தின் பேருந்து பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அதன் தடயவியல் குழுவினர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

accident bus Image
விபத்துக்குள்ளான பேருந்து புகைப்படம் (Credits - ETV Bharat)

By PTI

Published : Jun 10, 2024, 12:28 PM IST

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாஸி மாவட்டத்தில் சிவ் கோரி என்ற இடத்திலிருந்து பேருந்து ஒன்று காத்ரா பகுதிக்கு நேற்று மாலை 6.10 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பயங்கரவாதிகள் பேருந்து மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 41 பேர் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ரியாஸி மாவட்டத்தின் துணை காவல் ஆணையர் விசேஷ் பால் மகாஜன் பேசுகையில், “விபத்தில் உயிரிழந்த பேருந்து ஓட்டுநர் உட்பட அனைவரது உடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இருவரும் ரியாஸி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்த மற்றவர்கள் ராஜிந்தர் பிரசாத் பாண்டே, மம்தா சான்னே, பூஜா சான்னே மற்றும் அவரது இரண்டு வயது மகள் டிடு சான்னே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 14 வயது அனுராக் வர்மா உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறினார்.

உயிரிழந்தவர்களின் உடல் அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தாக்குதலில் காயமடைந்த 41 பயணிகள் அனைவரும் 3 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள். அதில் துப்பாக்கி குண்டால் காயம் அடைந்த 10 பேர், அறுவை சிகிச்சைக்கு பிறகு நலமாக உள்ளனர். மேலும் 18 நபர்கள் ஜம்மு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், 14 பேர் நாராயணா மருத்துவமனையிலும், 9 நபர்கள் ரியாஸி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்” எனக் கூறினார்.

விபத்தில் காயம் அடைந்தவர்களில் 34 பேர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 5 பேர் டெல்லி, 2 பேர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் அதன் தடயவியல் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ரியாஸி மாவட்டத்தில் பேருந்து பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்களின் முழு லிஸ்ட்! - 2024 NEW CABINET MINISTER

ABOUT THE AUTHOR

...view details