டெல்லி :நாளை (ஜூன்.23) நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்! - NEET PG Exam postponed - NEET PG EXAM POSTPONED
நாளை நடைபெற இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முறைகேடு புகார் தொடர்பாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
By PTI
Published : Jun 22, 2024, 10:20 PM IST
|Updated : Jun 22, 2024, 10:30 PM IST
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நாளை நடைபெற இருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். சில போட்டித் தேர்வுகளின் நேர்மை குறித்த சமீபத்திய குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவத் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நீட் முதுநிலை நுழைவுத் தேர்வின் செயல்முறைகளின் வலுவான தன்மையை முழுமையாக மதிப்பீடு செய்ய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.