மும்பை:முதல்கட்ட தகவல்களின் படி மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் அவரது மகன் ஜீஷான் சித்திக் அலுவலகம் அருகே நின்ற போது பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மூன்று நபர்கள் இந்த துணிகர செயலை நிகழ்த்தியுள்ளனர்.
அரசியல்வாதி சுட்டுக்கொலை: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்! - NCP LEADER SHOT DEAD
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் குழுவைச் சேர்ந்தவரான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Etv Bharat (Etv Bharat)
Published : Oct 12, 2024, 10:55 PM IST
|Updated : Oct 12, 2024, 11:01 PM IST
அடிப்படையில் காங்கிரஸ் நிர்வாகியான பாபா சித்திக் கடந்த பிப்ரவரி மாதம் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. பாந்த்ரா மேற்கு தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட இவர் 2014ம் ஆண்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத் தக்கது.
Last Updated : Oct 12, 2024, 11:01 PM IST