தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலுங்கானாவில் ஒரே நாளில் மூன்று புதிய கிளைகள் திறப்பு.. 118 கிளைகளாக விரிவடைந்த மார்கதர்சி சிட் ஃபண்ட்.. - MARGADARSI OPENED 3 NEW BRANCHES

மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் மூன்று புதிய கிளைகளை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் இன்று (நவ.16) தெலுங்கானாவில் தொடங்கிவைத்துள்ளார்.

Margadarsi Chit Fund
மார்கதர்சி சிட் ஃபண்ட் தெலங்கானா (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2024, 9:30 PM IST

ஹைதராபாத்: ராமோஜி ராவின் 88வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம் இன்று (நவ.16) தெலுங்கானாவில் மூன்று புதிய கிளைகளைத் திறந்தது. வனபர்த்தி, ஷம்ஷாபாத் மற்றும் ஹஸ்தினாபுரம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ள கிளைகளை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் திறந்து வைத்தார்.

சுமார் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் சேவை செய்து வரும் மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம் இன்று (நவ.16) தெலுங்கானாவில் புதிதாக மூன்று கிளைகளை தொடங்கியுள்ளதன் மூலமாக மொத்தம் நான்கு மாநிலங்களில் 118 கிளைகளாக விரிவடைந்துள்ளது.

முன்னதாக இன்று (நவ.16) காலை வனபர்த்தியில் திறக்கப்பட்டுள்ள மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் 116வது கிளையை மார்கதர்சி நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், ராமோஜி பிலிம் சிட்டியில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்து, புதிய கிளையின் திறப்பு விழாவை முன்னிட்டு மார்கதர்சியின் ஊழியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி மதுசூதன் மற்றும் துணைத் தலைவர் பலராம கிருஷ்ணா ஆகியோர் குத்துவிளக்கேற்றி, துறை செயல்பாடுகளை தொடங்கி வைத்தனர். அதனை அடுத்து இன்று (நவ.16) மாலையில், ஷம்ஷாபாத் மண்டல் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ரல்லகுடாவில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் 117வது கிளையை திறந்து வைத்தார்.

மார்கதர்சி சிட் ஃபண்டு கிளைகள் திறப்புவிழா (ETV Bharat Tamil nadu)

அதன் பின்னர், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபுரத்தில் 118வது கிளையை, மார்கதர்சி நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண் தொடங்கி வைத்தார். அதனையடுத்து, துணைத் தலைவர் ராஜாஜி, தலைமை நிர்வாக அதிகாரி சத்தியநாராயணன், கிளை மேலாளர் அருண்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கடசாமி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், "மார்கதர்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உழைத்து சம்பாதித்த பணத்தை உறுப்பினர்கள் சேமித்து வருகிறார்கள். அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க மார்கதர்சி மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களால் அனைத்து துறை உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:ஆரோக்கியத்தை வளர்க்கும் சபாலா மில்லட்ஸ்: ராமோஜி குழுமத்தின் புதிய அறிமுகம்..!

அதுமட்டும் அல்லாது, இன்று ராமோஜி ராவ் பிறந்தநாளையொட்டி, வனபர்த்தி, ஷம்ஷாபாத், ஹஸ்தினாபுரம் ஆகிய இடங்களில் புதிய கிளைகளை துவக்கியுள்ளோம். இதனால், அதிகமானோருக்கு வழிகாட்டுதல் மற்றும் நிதி சேவைகளை வழங்க எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்ய மார்கதர்சி எப்போதும் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.அதன் பின்னர், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபுரத்தில் 118வது கிளை மார்கதர்சி நிர்வாக இயக்குநர் சைலஜா கிரோனால் தொடங்கப்பட்டது. அதனை அடுத்து, துணைத் தலைவர் ராஜாஜி, தலைமை நிர்வாக அதிகாரி சத்தியநாராயணன், கிளை மேலாளர் அருண்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கடசாமி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், "மார்கதர்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உழைத்து சம்பாதித்த பணத்தை உறுப்பினர்கள் சேமித்து வருகிறார்கள். அவர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க மார்கதர்சி மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்களால் அனைத்து துறை உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டும் அல்லாது, இன்று ராமோஜி ராவ் பிறந்தநாளையொட்டி, வனபர்த்தி, ஷம்ஷாபாத், ஹஸ்தினாபுரம் ஆகிய இடங்களில் புதிய கிளைகளை துவக்கியுள்ளோம். இதனால், அதிகமானோருக்கு வழிகாட்டுதல் மற்றும் நிதி சேவைகளை வழங்க எங்கள் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். மக்களுக்கு சேவை செய்ய மார்கதர்சி எப்போதும் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details