4வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் எறத்தாழ 63.04 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Live: 4வது கட்ட மக்களவை தேர்தல் நிறைவு: 63.04 சதவீத வாக்குகள் பதிவு! - Lok Sabha Election 4th Phase - LOK SABHA ELECTION 4TH PHASE
Published : May 13, 2024, 8:01 AM IST
|Updated : May 13, 2024, 10:55 PM IST
22:53 May 13
63.04 சதவீத வாக்குகள் பதிவு!
19:42 May 13
மேற்கு வங்கத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு!
4வது கட்ட மக்களவை தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் அதிகபட்சமாக 75.66% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
19:40 May 13
62.31% வாக்குகள் பதிவு!
4வது கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
17:33 May 13
மனைவியுடன் வாக்களித்த மகேஷ் பாபு!
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதா ஷிரோத்கருடன் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
17:29 May 13
குடும்பத்துடன் வாக்களித்த ராம்சரண்!
தெலங்கானா மாநிலம் ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார்.
17:24 May 13
கல்வீச்சில் சிஐஎஸ்எப் வீரர் படுகாயம்!
மேற்கு வங்கம் மாநிலம் பாஸ்சிம் பர்தமான் பகுதியில் பாஜக வேட்பாளரின் வாகனத்தின் மீது திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறாப்படும் சம்பவத்தில் சிஐஎஸ்எப் வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
17:20 May 13
"இந்தியா கூட்டணிக்கு வெற்றி"
மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் என உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவை தொகுதி சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
17:19 May 13
3 மணி நிலவரம்: 52.60 சதவீத வாக்குகள் பதிவு!
10 மாநிங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 4வது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 3 மணி நிலவரப்படி 52.60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
14:32 May 13
1 மணி நிலவரம்: மேற்கு வங்கத்தில் 51.87% வாக்குப்பதிவு
1 மணி நிலவரம்
- ஆந்திரா - 36%
- மேற்கு வங்கம் - 51.87%
- ஜார்க்கண்ட் - 43.01%
- பீகார் - 34.44%
13:34 May 13
பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா வாக்களிப்பு
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பேட்மிட்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா வாக்களித்தார்.
13:20 May 13
ஆர்ஜேடி வேட்பாளர் ரோகிணி பெரியோரிடம் ஆசி பெற்றார்
பீகார் மாநிலம், சரண் மக்களவை தொகுதியில் போட்டியிடும் (RJD) ஆர்ஜேடி வேட்பாளர் ரோகிணி ஆச்சார்யா முதியவர்கள் மற்றும் பெண்களிடம் ஆசீர்வதம் பெற்றார்.
13:14 May 13
ஒய்எஸ்ஆர் - தெலுங்கு தேசம் கட்சி இடையே மோதல்
ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டம் ரெண்டாலா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் கட்சி முகவர்களுக்கும், ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் காயம்.
12:54 May 13
வாக்களாரை அறைந்த தெனாலி தொகுதி எம்எல்ஏ!
ஆந்திர பிரதேசத்தின் தெனாலி சட்டமன்றத் தொகுதியில் வரிசையில் காத்திருந்த வாக்காளரை, ஒய்எஸ்ஆர்சி எம்எல்ஏ சிவக்குமார் கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு அந்த வாக்களரும் அறைந்த நிலையில், இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தெனாலி தொகுதியில் ஒய்எஸ்ஆர்சி சிவக்குமார் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
12:51 May 13
பாஜக வேட்பாளர் மாதவி லதா ஆதரவாளர்கள் கைது எனத் தகவல்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் மாதவி லதா மங்கல்ஹாட் காவல் நிலையத்திற்கு வந்ததால், பாஜக தொண்டர்களை போலீஸார் கைது செய்ததாகக் கூறப்படுகிறது.
12:50 May 13
11 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 32.78% வாக்குப்பதிவு
11.00 மணி நிலவரம்
- ஆந்திரா - 18.81%
- மேற்கு வங்கம் - 32.78%
- ஒடிசா - 23.28%
- ஜார்க்கண்ட் - 27.40%
- பீகார் - 22.54%
11:41 May 13
11 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 32.78% வாக்குப்பதிவு
11.00 மணி நிலவரம்
- ஆந்திரா - 18.81%
- மேற்கு வங்கம் - 32.78%
- ஒடிசா - 23.28%
- ஜார்க்கண்ட் - 27.40%
- பீகார் - 22.54%
11:05 May 13
AIMIM வேட்பாளர் இம்தியாஸ் ஜலீல் வாக்களிப்பு
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் AIMIM வேட்பாளர் இம்தியாஸ் ஜலீல் தனது தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
10:38 May 13
'காஷ்மீரில் மக்கள் வாக்களிக்க வேண்டும்' - ஸ்ரீநகர் பிடிபி வேட்பாளர் வஹீத் பர்ரா
ஜம்மு & காஷ்மீர்:புல்வாமா பகுதியில் ஸ்ரீநகரின் பிடிபி வேட்பாளர் வஹீத் பர்ரா வாக்களித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'காஷ்மீர் மக்கள் தங்களின் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வாக்களிப்பதை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். எங்கள் கட்சியினர், வாக்குசாவடி முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களும், ஊடகங்களும், தேர்தல் ஆணையமும் இணைந்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டுகிறேன்' எனத் தெரிவித்தார்.
10:15 May 13
மேற்கு வங்கத்தில் பாஜக - டிஎம்சி தொண்டர்களிடையே மோதல்
மேற்கு வங்கம் மாநிலம் துர்காபூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 4ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவின் போது, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.
10:11 May 13
ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் வாக்களித்தார்
மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் உஜ்ஜயினியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
10:08 May 13
ஆஸ்கர் பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி வாக்களித்தார்
ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான எம்.எம்.கீரவாணி வாக்களித்தார்.
09:50 May 13
"அக்கறையுடன் வாக்களியுங்கள்" - இயக்குனர் ராஜமௌலி வேண்டுகோள்
தெலங்கானாவில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது வாக்கை செலுத்தினார். வாக்களித்த பிறகு, "நாட்டுக்கு பொறுப்பாக இருந்து காட்டுங்கள். அக்கறையுடன் தயவுசெய்து வெளியே வந்து வாக்களியுங்கள்" என்று இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கோரிக்கை விடுத்துள்ளார்.
09:41 May 13
9.00 மணி நிலவரம்: ஆந்திராவில் 9.21% வாக்குப்பதிவு
9.00 மணி நிலவரம்
ஒடிசா (முதல் கட்ட வாக்குப்பதிவு) - 9.25% வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் - 11.78% வாக்குப்பதிவு
மேற்குவங்கம் - 15.02% வாக்குப்பதிவு
ஆந்திர பிரதேசம் - 9.21% வாக்குப்பதிவு
09:31 May 13
ஆந்திர மாநில முதலமைச்சர் வாக்களித்தார்
கடப்பா தொகுதியில் உள்ள ஜெயமஹால் வாக்குச்சாவடியில் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வாக்களித்தார்.
09:17 May 13
நடிகர் அல்லு அர்ஜூன் வாக்களித்தார்
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் வாக்களித்தார்.
08:45 May 13
இந்தியா கூட்டணி - பாஜக - ஜனசேனா இடையே மும்முனைப் போட்டி
ஒய்எஸ்ஆர்சி, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி மற்றும் பாஜக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய 175 சட்டமன்றத் தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
07:51 May 13
மக்களவை தேர்தல்: 4ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளுக்கு 4வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
உ.பி, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. மேலும், ஆந்திரா, ஒடிசா சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவும் ஆரம்பித்துள்ளது. ஆந்திராவில் 175 தொகுதிகளிலும், ஒடிசாவில் 28 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019இல், தற்போது தேர்தல் நடக்கும் 96 தொகுதிகளில், பாஜக கூட்டணி 41 இடத்திலும், INDIA கூட்டணி 11 இடத்திலும் வென்றிருந்தன.