ஹைதராபாத்: இந்தியாவில் மொத்தம் உள்ள 28 மாநிலங்களில், 12 மாநிலங்களில் 16 பெண் முதல்வர்கள் பதவி வகித்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது டெல்லி முதல்வராக கல்வித்துறை அமைச்சராக உள்ள அதிஷி(Atishi) இணைய உள்ளார்.
சுசேதா கிருபளானி:உத்தரப் பிரதேசத்தின் முதல் பெண் முதல்வரான இவர், இந்திய தேசிய காங்கிரஸ்(indian national congress) கட்சியைச் சேர்ந்தவர். 1963 அக்டோபர் முதல் 1967 மார்ச் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.
நந்தினி சத்பதி:ஒடிசாவின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வரான இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1972 ஜூன் முதல் 1973 மார்ச் வரை மற்றும் 1974 மார்ச் முதல் 1979 டிசம்பர் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.
சசிகலா ககோட்கர்: கோவா மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வரான இவர், மகாராஷ்டிரவாடி கோமாந்தக் கட்சியைச் சேர்ந்தவர். 1973 ஆகஸ்ட் முதல் 1979 ஏப்ரல் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.
சையதா அன்வேரா தைமூர்:அசாம் மாநிலத்தின் முதல் மற்றும் ஒரே பெண் முதல்வரான இவர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1980 டிசம்பர் முதல் 1981 ஜூன் வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.
ஜானகி ராமச்சந்திரன்: தமிழ்நாட்டின் முதல் பெண் முதல்வரான இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1988 ஜனவரி 7 முதல் 1988 ஜனவரி 30 வரை முதல்வர் பொறுப்பு வகித்துள்ளார்.
ஜெ.ஜெயலலிதா:தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்துள்ள இவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(AIADMK) கட்சியைச் சேர்ந்தவர். 1991 ஜூன் முதல் 1996 மே வரை மற்றும் 2001 மே முதல் 2001 செப்டம்பர் வரை மற்றும் 2002 மார்ச் முதல் 2006 மே வரை மற்றும் 2011 மே முதல் 2014 செப்டம்பர் வரை மற்றும் 2015 மே முதல் 2016 வரை முதல்வர் பதவி வகித்துள்ளார்.
மாயாவதி: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் தலித் பெண் முதல்வர் ஆவார். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி, கடந்த 1995 ஜூன் முதல் 1995 அக்டோபர் வரை மற்றும் 1997 மார்ச் முதல் 1997 செப்டம்பர் வரை மற்றும் 2002 மே முதல் 2003 ஆகஸ்ட் வரை மற்றும் 2007 மே முதல் 2012 மார்ச் வரை முதல்வர் பதவியில் இருந்துள்ளார்.