தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வயநாடு நிலச்சரிவு; "முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இயன்ற நிதியை அளியுங்கள்" - பினராயி விஜயன் வேண்டுகோள்! - wayanad landslides - WAYANAD LANDSLIDES

Wayanad Landslides : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியினை அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.

பினராயி விஜயன், நிலச்சரிவு
பினராயி விஜயன், நிலச்சரிவு (Credits - CMO Kerala X Page, ETV Bharat Tamil Nadu)

By PTI

Published : Jul 30, 2024, 8:04 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாட்டில் அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். மேலும், நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மற்றும் உயிரிழந்தவர்களை மீட்கும் பணிகள் பேரிடர் மீட்புக்குழு மற்றும் ராணுவத்தினரால் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் இன்று (ஜூலை 30) மாலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "இந்த நிலச்சரிவில் இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 128 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவித்தார். (தற்போதைய நிலவரப்படி 110 பேர் பலி)

மேலும், உயிரிழந்தவரில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் 18 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், போத்துக்கல் கிராமத்தில் உள்ள சாலி ஆற்றில் இருந்து 16 பேர் உடல்களின் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. (தற்போதைய நிலவரப்படி 42 பேர் உடல்கள் அடையாளம்; சாலி ஆற்றில் 32)

இந்த நிலச்சரிவானது நள்ளிரவு 2 மணி மற்றும் அதிகாலை 4.30 மணி அளவில் நடைபெற்றுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளுக்கு இடையே நூற்றுக்கணக்கான நபர்கள் சிக்கி உள்ளனர். இந்த நிலச்சரிவானது கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது நடைபெற்றுள்ளது. இதில், பலர் உள்ளே சிக்கி இருக்கலாம், அல்லது அடித்து செல்லப்பட்டிருக்கலாம் அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், 45 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 3,069 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பினராயி விஜயன் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு.. 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - மாநில அரசு அறிவிப்பு! - KERALA LANDSLIDE

ABOUT THE AUTHOR

...view details