தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 2:32 PM IST

ETV Bharat / bharat

“நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து” - கங்கனா ரனாவத்! - Kangana Ranaut

Kangana Ranaut: மகாராஷ்டிரா சட்டசபை எதிர்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் கங்கனா ரணாவத்திற்கு மாட்டிறைச்சி பிடிக்கும் என்று கூறியதற்கு, தன்னைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்புவது வெட்கக்கேடானது என கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கம் போல், தேர்தல் களத்தில் திரை நட்சத்திரங்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிரா சட்டசபை எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான விஜய் வடேட்டிவார், தேர்தல் பிரச்சாரத்தின் போது, “பாஜகவினர் பசுவை தெய்வமாக பார்ப்பர். அந்த பாஜகவில் இருக்கும் நடிகை கங்கனா, ஒருமுறை மாட்டிறைச்சி பிடிக்கும் என தனது எக்ஸ் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது பாஜகவின் அழுக்கு கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது” என்று விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கங்கனா தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் வலைத்தளப் பக்கத்தில், “நான் மாட்டிறைச்சி உள்ளிட்ட சிவப்பு இறைச்சிகளை சாப்பிடுவது கிடையாது. என்னைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்புவது வெட்கக்கேடானது.

நான் கடந்த பத்தாண்டுகளாக யோகா மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகிறேன். எனது நற்பெயரைக் கெடுக்கும் முயற்சி. நான் பெருமைமிக்க இந்து என்று மக்களுக்கு தெரியும். ஜெய் ஸ்ரீ ராம்” என்று தெரிவித்துள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. அண்மையில், இவர் நாட்டின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த ஆடு ஜீவிதம்! வசூலி மஞ்சுமெல் பாய்சை பின்னுக்குத் தள்ளி சாதனை! - The Goat Life Movie Cross 100 Crore

ABOUT THE AUTHOR

...view details