ETV Bharat / state

நெல்லை டூ விக்கிரவாண்டி..விஜய் மாநாடு வெற்றி பெற த.வெ.க. நிர்வாகிகள் புனித யாத்திரை! - Pilgrimage of TVK Administrators

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

விஜயின் தவெக மாநாடு வெற்றி பெற நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல் உள்பட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து தவெக நிர்வாகிகள் புனித நீர் எடுத்துச் சென்று நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித யாத்திரை மேற்கொண்ட தவெக நிர்வாகிகள்
புனித யாத்திரை மேற்கொண்ட தவெக நிர்வாகிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த பிப்ரவரியில் 'தமிழக வெற்றிக் கழகம்' என்னும் கட்சியைத் தொடங்கினார். மேலும் அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் பாடலை விஜய் சென்னையில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக, தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, பல்வேறு தடைகள் ஏற்பட்ட நிலையில், ஒரு வழியாக தற்போது வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.

எனவே, நடிகர் விஜய், தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்கான பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பல்வேறு குழுக்களை அமைத்து மாநாடு பணிகளை கவனித்து வருகின்றனர். மேலும், இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மாநாட்டு மேடை அமைப்பதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை (அக்.04) நடைபெறுகிறது என்றும், இதில் நடிகர் விஜய் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தில் பெறப்பட்ட புனித நீர்
தேவாலயத்தில் பெறப்பட்ட புனித நீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், தவெக கட்சியின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டியும், விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டியும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் நாளை (அக்.04) நடக்கவிருக்கும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து புனித நீர் எடுத்து செல்ல இருக்கின்றனர்.

அந்தவகையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயில், உடையார்பட்டி உச்சிஷ்ட கணபதி கோயில், தூத்துக்குடி பனிமய மாதா கோயில், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் மற்றும் இஸ்லாமியர்களின் பள்ளிவாசல் உள்பட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் புனித நீர் எடுத்துச் சென்று நாளை நடைபெறும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் அந்த புனித நீரை தெளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கோயிலில் பெறப்பட்ட புனித நீர்
கோயிலில் பெறப்பட்ட புனித நீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: தவெக மாநாட்டை முன்னிட்டு களைகட்டும் விக்கிரவாண்டி... அக்டோபர் 4ஆம் தேதி பூமி பூஜை?

மேலும், நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. அதிலும் குறிப்பாக, பெரியார் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு நடிகர் விஜய் மரியாதை செலுத்திய நிலையில், தவெக திராவிட கொள்கைகளுடன் செயல்படுகிறது என்று பேசப்பட்டது.

பள்ளிவாசலில் பெறப்பட்ட புனித நீர்
பள்ளிவாசலில் பெறப்பட்ட புனித நீர் (Credits - ETV Bharat Tamil Nadu)

இதுபோன்ற சூழலில், தற்போது தவெக மாநாட்டின் பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்காக, தென் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் புண்ணிய ஸ்தலங்களில் இருந்து புனித நீர் எடுத்துச் செல்லும் நிகழ்வு கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.