ETV Bharat / bharat

ஈஷா விவகாரம்: தமிழக காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Isha Foundation row - ISHA FOUNDATION ROW

வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஈஷா ஆசிரமத்தில் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக அப்பெண்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்ச நீதிமன்றம் (கோப்புப் படம்) (Credits - IANS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2024, 3:47 PM IST

Updated : Oct 3, 2024, 7:16 PM IST

புதுடெல்லி: கோவை ஈஷா யோகா மையத்தில் இரண்டு பெண்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில், விசாரணை நடத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் காமராஜ். இவரது இரண்டு மகள்கள் கோவை ஈஷா யோகா மையத்துக்கு யோகா கற்க சென்ற நிலையில் அங்கேயே தங்கிவிட்டனர். இந்நிலையில் தனது இருமகள்களையும் ஆசிரமத்தினர் மூளை சலவை செய்து, துறவறம் ஏற்கச் செய்துள்ளதாகவும், அவர்களை காண்பதற்கு பெற்றோர், உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, கோவை ஈஷா ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தனது இருமகள்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களை பெற்றோருடன் செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி, காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையும் படிங்க: தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்.. அலறி கூச்சலிட்ட ரயில்வே ஊழியர் - பயணிகள் செய்த செயல்!

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகள் குறித்த விவரங்களையும் சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக காவல் துறை, சமூக நலத்துறைகளுக்கு கடந்த 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் ஈஷா அறக்கட்டளையில் கடந்த இரு நாள்களாக காவல் துறையினர், சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈஷா அறக்கட்டளை சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரும் இருந்தனர்.

ஈஷா அறக்கட்டளை சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிடுகையில், "உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும். சுமார் 150 போலீசார் ஈஷா ஆசிரமத்துக்குள் நுழைந்து ஒவ்வொரு மூலையிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

இதைத் தொடர்ந்து, வீடியோ கான்பரன்சிங் மூலம் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஈஷா ஆசிரமத்தில் தாங்கள் தங்கள் விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக அப்பெண்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, "சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக காவல் துறை மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர். மேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, காவல் துறை விசாரணை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை, வரும் அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் வாரத்தில் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 3, 2024, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.